4661
திண்மையே முதலைங் குணக்கரு வாய 

செல்வமே நல்வழி காட்டும் 
கண்மையே கண்மை கலந்தஎன் கண்ணே 

கண்ணுற இயைந்தநற் கருத்தே 
உண்மையே எல்லாம் உடையஓர் தலைமை 

ஒருதனித் தெய்வமே உலவா 
வண்மையே என்றேன் வந்தருட் சோதி 

வழங்கினை வாழிநின் மாண்பே   
4662
காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த 

கற்பகத் தனிப்பெருந் தருவே 
தூய்மையே விளக்கித் துணைமையே அளித்த 

சோதியே தூய்மைஇல் லவர்க்குச் 
சேய்மையே எல்லாம் செயவல்ல ஞான 

சித்தியே சுத்தசன் மார்க்க 
வாய்மையே என்றேன் வந்தருட் சோதி 

வழங்கினை வாழிநின் மாண்பே  
4663
என்னவா அனைத்தும் ஈந்தவா என்னை 

ஈன்றவா என்னவா வேதம் 
சொன்னவா கருணைத் தூயவா பெரியர் 

துதியவா அம்பலத் தமுதம் 
அன்னவா அறிவால் அறியரி வறிவா() 

ஆனந்த நாடகம் புரியும் 
மன்னவா என்றேன் வந்தருட் சோதி 

வழங்கினை வாழிநின் மாண்பே   
 () அறியறி வறிவா - பி இரா, ச மு க 

4664
விரதமா திகளும் தவிர்த்துமெய்ஞ் ஞான 

விளக்கினால் என்னுளம் விளக்கி 
இரதமா தியநல் தௌ;ளமு தளித்திங் 

கென்கருத் தனைத்தையும் புரிந்தே 
சரதமா நிலையில் சித்தெலாம் வல்ல 

சத்தியைத் தயவினால் தருக 
வரதனே என்றேன் வந்தருட் சோதி 

வழங்கினை வாழிநின் மாண்பே   
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 அச்சோப் பத்து 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4665
கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப் 

பெருங்கருணைக் கடலை வேதத் 
திருத்தனைஎன் சிவபதியைத் தீங்கனியைத் 

தௌ;ளமுதத் தெளிவை வானில் 
ஒருத்தனைஎன் உயிர்த்துணையை உயிர்க்குயிரை 

உயிர்க்குணர்வை உணர்த்த னாதி 
அருத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ 

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ