4671
எம்மையும்என் தனைப்பிரியா தென்னுளமே 

இடங்கொண்ட இறைவன் தன்னை 
இம்மையில்என் தனக்கழியாத் திருவடிவம் 

தந்தானை எல்லாம் வல்ல 
செம்மைதரு சித்தனைஎன் சிவபதியைத் 

தௌ;ளமுதத் திரளை என்றன் 
அம்மையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ 

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ   
4672
என்னையும்என் பொருளையும்என் ஆவியையும் 

தான்கொண்டிங் கென்பால் அன்பால் 
தன்னையும்தன் பொருளையும்தன் ஆவியையும் 

களித்தளித்த தலைவன் தன்னை 
முன்னையும்பின் னையும்எனக்கே முழுத்துணையாய் 

இருந்தமுழு முதல்வன் தன்னை 
அன்னையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ 

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ   
4673
எண்ணலைவே றிரங்கலைநின் எண்ணமெலாம் 

தருகின்றோம்() இன்னே என்றென் 
கண்நிரம்ப ஒளிகாட்டிக் கருத்தில்அமர்ந் 

திருக்கின்ற கருத்தன் தன்னைப் 
புண்ணியனை உளத்தூறும் புத்தமுதை 

மெய்இன்பப் பொருளை என்றன் 
அண்ணலைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ 

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ   
 () தருகின்றாம் - பி இரா பதிப்பு   
4674
சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம் 

விடுவித்தென் தன்னை ஞான 
நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க 

நிலைதனிலே நிறுத்தி னானைப் 
பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப் 

பராபரனைப் பதிஅ னாதி 
ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ 

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ   
திருச்சிற்றம்பலம்
டீயஉம--------------------------------------------------------------------------------


 அனுபவ நிலை 

கட்டளைக் கலித்துறை 
4675
நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர் 
வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன் 
ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன் 
தேன்செய்த தௌ;ளமு துண்டேன்கண் டேன்மெய்த் திருநிலையே