4681
கூடிய நாளிது தான்தரு ணம்எனைக் கூடிஉள்ளே 
வாடிய வாட்டமெல் லாந்தவிர்த் தேசுக வாழ்வளிப்பாய் 
நீடிய தேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன் 
ஆடிய பாதம் அறியச்சொன் னேன்என தாண்ட வனே   
4682
ஆக்கிய நாள்இது தான்தரு ணம்அருள் ஆரமுதம் 
தேக்கிமெய் இன்புறச் செய்தருள் செய்தருள் செய்தருள்நீ 
நீக்கினை யேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன் 
தூக்கிய பாதம் அறியச்சொன் னேன்அருட் சோதியனே   
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 அருட்பெருஞ்சோதி அடைவு 

கட்டளைக் கலித்துறை 
4683
அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற 
அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும் 
அருட்பெருஞ் சோதித்தௌ; ளார்அமு தாகிஉள் அண்ணிக்கின்ற 
அருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே   
4684
ஆர்கின்ற தௌ;ளமு தின்சுவை என்என் றறைவன்அந்தோ 
சார்கின்ற சிற்றம் பலப்பெருஞ் சீரினைச் சாற்றுதொறும் 
சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே 
நேர்கின்ற தால்என் அருட்பெருஞ் சோதி நிறைந்துளத்தே   
4685
உளத்தே பெருங்களிப் புற்றடி யேன்மிக உண்ணுகின்றேன் 
வளத்தே அருட்பெருஞ் சோதியி னால்ஒளி வாய்ந்தெனது 
குளத்தே நிறைந்தணை யுங்கடந் தோங்கிக் குலவுபரி 
மளத்தே மிகுந்து வயங்கும் அமுதம் மனமகிழ்ந்தே