4736
கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன் 

கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச் 
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் 

சாவையும் நோவையும் தவிர்ந்தேன் 
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் 

செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப் 
பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும் 

பண்ணிய தவம்பலித் ததுவே  
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 சிவானந்தப் பற்று 

கட்டளைக் கலித்துறை 
4737
வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கியநின் 
பாதமும் மாமுடி யும்கண்டு கொள்ளும் படிஎனக்கே 
போதமும் போதத் தருள்அமு தும்தந்த புண்ணியனே 
நாதமும் நாத முடியும் கடந்த நடத்தவனே  
4738
வண்ணப்பொன் னம்பல வாழ்வேஎன் கண்ணினுள் மாமணியே 
சுண்ணப்பொன் நீற்றொளி ஓங்கிய சோதிச் சுகப்பொருளே 
எண்ணப்ப யின்றஎன் எண்ணம் எலாம்முன்னர் ஈகஇதென் 
விண்ணப்பம் ஏற்று வருவாய்என் பால்விரைந் தேவிரைந்தே   
4739
சிற்சபை அப்பனைக் கண்டுகொண் டேன்அருள் தௌ;ளமுதம் 
சற்சபை உள்ளம் தழைக்கஉண் டேன்உண்மை தான்அறிந்த 
நற்சபைச் சித்திகள் எல்லாம்என் கைவசம் நண்ணப்பெற்றேன் 
பொற்சபை ஓங்கப் புரிந்தாடு தற்குப் புகுந்தனனே  
4740
வரையற்ற சீர்ப்பெரு வாழ்வுதந் தென்மனம் மன்னிஎன்றும் 
புரையற்ற மெய்ந்நிலை ஏற்றிமெய்ஞ் ஞானப் பொதுவினிடைத் 
திரையற்ற காட்சி அளித்தின் னமுதத் தெளிவருளி 
நரையற்று மூப்பற் றிறப்பற் றிருக்கவும் நல்கியதே()  
 () நண்ணினனே - முதற்பதிப்பு, பொ சு, ச மு க