4766
தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித் 

தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு() 
வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல் 

விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே 
வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை 

வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும் 
தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே 

சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே   
 () தனித்துண்டு வயிறும் - முதற்பதிப்பு, பொ சு, பி இரா, ச மு க  
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 திருவருட்பேறு

நேரிசை வெண்பா 
4767
சீர்விளங்கு சுத்தத் திருமேனி தான்தரித்துப் 
பார்விளங்க நான்படுத்த பாயலிலே - தார்விளங்க 
வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தனையே 
எந்தாய்நின் உள்ளமறி யேன்   
4768
பயத்தோ டொருபால் படுத்திருந்தேன் என்பால் 
நயத்தோ டணைந்தே நகைத்து - வயத்தாலே 
தூக்கி எடுத்தெனைமேல் சூழலிலே வைத்தனைநான் 
பாக்கியவான் ஆனேன் பதிந்து   
4769
என்னேநின் தண்ணருளை என்னென்பேன் இவ்வுலகில் 
முன்னே தவந்தான் முயன்றேனோ - கொன்னே 
படுத்தயர்ந்தேன் நான்படுத்த பாய்அருகுற் றென்னை 
எடுத்தொருமேல் ஏற்றிவைத்தா யே   
4770
சிந்தா குலத்தொடுநான் தெய்வமே என்றுநினைந் 
தந்தோ படுத்துள் அயர்வுற்றேன் - எந்தாய் 
எடுத்தாள் எனநினையா தேகிடந்தேன் என்னை 
எடுத்தாய் தயவைவிய வேன்