4781
தோலைக் கருதித் தினந்தோறும் 

சுழன்று சுழன்று மயங்கும்அந்த 
வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும் 

அடக்கி ஞான மெய்ந்நெறியில் 
கோலைத் தொலைத்துக் கண்விளக்கம் 

கொடுத்து மேலும் வேகாத 
காலைக் கொடுத்தாய் நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே  
4782
பட்டிப் பகட்டின் ஊர்திரிந்து 

பணமே நிலமே பாவையரே 
தெட்டிற் கடுத்த பொய்ஒழுக்கச் 

செயலே என்று திரிந்துலகில் 
ஒட்டிக் குதித்துச் சிறுவிளையாட் 

டுஞற்றி யோடும் மனக்குரங்கைக் 
கட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே  
4783
மதியைக் கெடுத்து மரணம்எனும் 

வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர் 
விதியைக் குறித்த சமயநெறி 

மேவா தென்னைத் தடுத்தருளாம் 
பதியைக் கருதிச் சன்மார்க்கப் 

பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர் 
கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே   
4784
தருண நிதியே என்னொருமைத் 

தாயே என்னைத் தடுத்தாண்டு 
வருண நிறைவில் சன்மார்க்கம் 

மருவப் புரிந்த வாழ்வேநல் 
அருண ஒளியே எனச்சிறிதே 

அழைத்தேன் அழைக்கும் முன்வந்தே 
கருணை கொடுத்தாய் நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே  
4785
பொற்பங் கயத்தின் புதுநறவும் 

சுத்த சலமும் புகல்கின்ற 
வெற்பந் தரமா மதிமதுவும் 

விளங்கு() பசுவின் தீம்பாலும் 
நற்பஞ் சகமும் ஒன்றாகக் 

கலந்து மரண நவைதீர்க்கும் 
கற்பங் கொடுத்தாய் நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே  
  விளங்கும் - முதற்பதிப்பு, பொ, சு, பி இரா, ச மு க