4796
போதல் ஒழியா மனக்குரங்கின் 

போக்கை அடக்கத் தெரியாது 
நோதல் புரிந்த சிறியேனுக் 

கிரங்கிக் கருணை நோக்களித்துச் 
சாதல் எனும்ஓர் சங்கடத்தைத் 

தவிர்த்தென் உயிரில் தான்கலந்த 
காதல் அரசே நின்தனக்குக் 

கைம்மா றேது கொடுப்பேனே   
திருச்சிற்றம்பலம் 
டீயஉம

--------------------------------------------------------------------------------


 திருவருட் கொடை 

கொச்சகக் கலிப்பா 
4797
சிருட்டிமுதல் ஐந்தொழில்நான் செய்யஎனக் கருள்புரிந்தாய் 
பொருட்டிகழ்நின் பெருங்கருணைப் புனிதஅமு துவந்தளித்தாய் 
தெருட்டிகழ்நின் அடியவர்தம் திருச்சபையின் நடுஇருத்தித் 
தெருட்டிஎனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்   
4798
படைத்தல்முதல் ஐந்தொழில்செய் பணிஎனக்கே பணித்திட்டாய் 
உடைத்தனிப்பேர் அருட்சோதி ஓங்கியதௌ; ளமுதளித்தாய் 
கொடைத்தனிப்போ கங்கொடுத்தாய் நின்அடியர் குழுநடுவே 
திடத்தமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்   
4799
அயன்முதலோர் ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்திட்டாய் 
உயர்வுறுபேர் அருட்சோதித் திருவமுதம் உவந்தளித்தாய் 
மயர்வறுநின் அடியவர்தம் சபைநடுவே வைத்தருளிச் 
செயமுறவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்  
4800
ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்தாய்நின் அருளமுதென் 
கைவரச்செய் துண்ணுவித்தாய் கங்கணம்என் கரத்தணிந்தாய் 
சைவர்எனும் நின்னடியார் சபைநடுவே வைத்தருளித் 
தெய்வமென்று வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்