4816
சிற்றம் பலத்தைத் தெரிந்துகொண் டேன்எம் சிவன்அருளால் 
குற்றம் பலவும் தவிர்ந்துநின் றேன்எண் குணக்குன்றிலே 
வெற்றம்பல் செய்தவர் எல்லாம் விரைந்து விரைந்துவந்தே 
நற்றம் பலம்தரு வாய்என்கின் றார்இந்த நானிலத்தே   
4817
ஒன்றுகண் டேன்திரு அம்பலத் தேஒளி ஓங்குகின்ற 
நன்றுகண் டேன்உல கெல்லாம் தழைக்க நடம்புரிதல் 
இன்றுகண் டேன்என்றும் சாகா வரத்தை எனக்கருள 
மன்றுகண் டார்க்கிந்த வாழ்வுள தென்று மகிழ்ந்தனனே   
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 பொன்வடிவப் பேறு 

நேரிசை வெண்பா 
4818
அருட்பெருஞ் சோதி அபயம் அபயம் 
பொருட்பெருஞ் சோதிப் புணைதந் - திருட்பெருங்கார் 
அள்ளற் கடல்கடத்தி அக்கரைமேல் ஆனந்தம் 
கொள்ளற் கபயங் கொடு   
4819
ஆரமுதம் தந்தென்னுள் அச்சமெலாம் தீர்த்தருளிச் 
சீரமுத வண்ணத் திருவடிகண் - டார்வமிகப் 
பாடி உடம்புயிரும் பத்திவடி வாகிக்கூத் 
தாடிக் களிக்க அருள்   
4820
இடர்தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த 
சுடர்கலந்த ஞான்றே சுகமும் - முடுகிஉற்ற 
தின்னே களித்திடுதும் என்நெஞ்சே அம்பலவன் 
பொன்னேர் பதத்தைப் புகழ்