4851
கோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே 

கொடுமோகக் கடைப்பயலே குறும்புமதப் பயலே 
தாபஉலோ பப்பயலே மாற்சரியப் பயலே 

தயவுடன்இங் கிசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண் 
தீபம்எலாம் கடந்திருள்சேர் நிலஞ்சாரப் போவீர் 

சிறிதுபொழு திருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர் 
சாபமுறா முன்னம்அறிந் தோடுமினோ என்னைத் 

தான்அறியீர் தனித்தலைவன் தலைப்பிள்ளை நானே   
4852
பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனும்ஓர் 

படுபாவிப் பயலேஆ பத்தெனும்பொய்ப் பயலே 
வசியவத்தைக் கடைப்பயலே தடைப்பயலே இடராம் 

வன்பயலே நீவீர்எலாம் என்புடைநில் லாதீர் 
நசியஉமக் குளம்உளதோ இக்கணத்தே நீவீர் 

நடந்துவிரைந் தோடுமினோ நாடறியா வனத்தே 
கசியுமனத் தெனைஅறியீர் சிற்சபையில் விளங்கும் 

கடவுள்மகிழ்ந் தளித்ததனிக் கதிர்ப்பிள்ளை நானே  
4853
மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே 

வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே 
பரணம்உறு பேர்இருட்டுப் பெருநிலமும் தாண்டிப் 

பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ 
இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான் 

என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை 
அரண்உறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான் 

அருட்பெருஞ்ஸோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே   
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 பேறடைவு 

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4854
மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர் 

வரையுள தாதலால் மகனே 
எணம்புரிந் துழலேல் சவுளம்ஆ தியசெய் 

தெழில்உறு மங்கலம் புனைந்தே 
குணம்புரிந் தெமது மகன்எனும் குறிப்பைக் 

கோலத்தால் காட்டுக எனவே 
வணம்புரி மணிமா மன்றில்என் தந்தை 

வாய்மலர்ந் தருளினர் மகிழ்ந்தே   
4855
எம்பொருள் எனும்என் அன்புடை மகனே 

இரண்டரைக் கடிகையில் உனக்கே 
அம்புவி வானம் அறியமெய் அருளாம் 

அனங்கனை() தனைமணம் புரிவித் 
தும்பரும் வியப்ப உயர்நிலை தருதும் 

உண்மைஈ தாதலால் உலகில் 
வெம்புறு துயர்தீர்ந் தணிந்துகொள் என்றார் 

மெய்ப்பொது நடத்திறை யவரே   
 () அங்கனை - முதற்பதிப்பு, பொ சு; பி இரா, ச மு க