4871
கட்டுக் கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்தென் 
மட்டுக் கடங்கா ஆங்கார மதமா அடங்க அடக்குவித்தே 
எட்டுக் கிசைந்த இரண்டும்எனக் கிசைவித் தெல்லா இன்னமுதும் 
அட்டுக் கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே  
4872
புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என் 
தொல்லும் உலகப் பேராசை உவரி கடத்தி எனதுமனக் 
கல்லுங் கனியக் கரைவித்துக் கருணை அமுதங் களித்தளித்தே 
அல்லும் பகலும் எனதுளத்தே அமர்ந்தோய் யான்உன் அடைக்கலமே  
4873
பிச்சங் கவரி நிழற்றியசைத் திடமால் யானைப் பிடரியின்மேல் 
நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுதேத்த 
எச்சம் புரிவோர் போற்றஎனை ஏற்றா நிலைமேல் ஏற்றுவித்தென் 
அச்சந் தவிர்த்தே ஆண்டுகொண்டோ ய் அடியேன் உன்றன் அடைக்கலமே  
4874
இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து 
மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து 
தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே 
அருளைக்கொடுத்தென் தனைஆண்டோ ய் அடியேன் உன்றன் அடைக்கலமே  
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 இறைவரவு இயம்பல் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4875
அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய் 

அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க் 
கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர் 

எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை 
இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும் 

எவ்வுயிரும் எவ்வௌரும் ஏத்திமகிழ்ந் திடவே 
செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே 

செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே