4891
சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் 

சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார் 
நினைப்பள்ளி உண்ணத்தௌ; ளாரமு தளிக்கும் 

நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார் 
முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி 

முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே 
எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி 

என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே  
4892
மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு 

வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான் 
கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே 

கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார் 
பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே 

பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார் 
இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி 

என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே  
4893
மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள் 

வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம் 
அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும் 

அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத் 
தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச் 

சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே 
இருள்அறுத் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி 

என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே  
4894
அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே 

அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை 
வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே 

வாழ்த்துகின் றோம்முன்னர் வணங்கிநிற் கின்றோம் 
விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது 

விரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம் 
இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதி 

எம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே  
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 திரு உந்தியார் 

கலித்தாழிசை 
4895
இரவு விடிந்தது இணையடி வாய்த்த 
பரவி மகிழ்ந்தேன்என்று உந்தீபற 
பாலமுது உண்டேன்என்று உந்தீபற