4896
பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த 
தொழுது மகிழ்ந்தேன்என்று உந்தீபற 
தூயவன் ஆனேன்என்று உந்தீபற  
4897
தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன் 
ஏக்கம் தவிர்ந்தேன்என்று உந்தீபற 
இன்னமுது உண்டேன்என்று உந்தீபற  
4898
துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது 
இன்பம் கிடைத்ததென்று உந்தீபற 
எண்ணம் பலித்ததென்று உந்தீபற  
4899
ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது 
தீனந் தவிர்ந்ததென்று உந்தீபற 
சிற்சபை கண்டேன்என்று உந்தீபற   
4900
திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று 
பரைஒளி ஓங்கிற்றென்று உந்தீபற 
பலித்தது பூசையென்று உந்தீபற