4901
உள்ளிருள் நீங்கிற்றென் உள்ளொளி ஓங்கிற்றுத் 
தௌ;ளமுது உண்டேன்என்று உந்தீபற 
தித்திக்க உண்டேன்என்று உந்தீபற  
4902
எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன் 
சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற 
சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற  
4903
தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன் 
சிந்தை களித்தேன்என்று உந்தீபற 
சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற  
4904
முத்தியைப் பெற்றேன்அம் முத்தியினால் ஞான 
சித்தியை உற்றேன்என்று உந்தீபற 
சித்தனும் ஆனேன்என்று உந்தீபற   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 அருள் அற்புதம் 

சிந்து 

பல்லவி 

4905
அற்புதம் அற்புத மே - அருள் 
அற்புதம் அற்புத மே   


கண்ணிகள்