4911
புறங்கூறி னாரெல்லாம் புல்லெனப் போயினர் 
பொற்படிக் கீழ்ப்புற மீளவு மேயினர் 
மறங்கூறி னோம்என்செய் வோம்என்று கூயினர் 
வாழிய என்றுசொல் வாயினர் ஆயினர்  அற்புதம்  
4912
வௌ;வினைக் காடெலாம் வேரொடு வெந்தது 
வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது 
செவ்விய ஞானம் சிறப்புற வந்தது 
சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது  அற்புதம்  
4913
சாதி சமயச் சழக்கெலாம் அற்றது 
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது 
மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது 
மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது   
 அற்புதம் அற்புத மே - அருள் 
அற்புதம் அற்புத மே   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 ஆணிப்பொன்னம்பலக் காட்சி 

சிந்து 

பல்லவி 

4914
ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள் 
அற்புதக் காட்சிய டி - அம்மா 
அற்புதக் காட்சிய டி  


கண்ணிகள் 
4915
ஸோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு 
வீதிஉண் டாச்சுத டி - அம்மா 
வீதிஉண் டாச்சுத டி  ஆணி