4916
வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு 
மேடை இருந்தத டி - அம்மா 
மேடை இருந்தத டி ஆணி  
4917
மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு 
கூடம் இருந்தத டி - அம்மா 
கூடம் இருந்தத டி ஆணி  
4918
கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை 
மாடம் இருந்தத டி - அம்மா 
மாடம் இருந்தத டி ஆணி  
4919
ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம் 
என்னென்று சொல்வன டி - அம்மா 
என்னென்று சொல்வன டி ஆணி  
4920
ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி 
சீர்நீலம் ஆச்சுத டி - அம்மா 
சீர்நீலம் ஆச்சுத டி ஆணி