4921
பாரோர் நிலையில் கருநீலம் செய்ய 
பவளம தாச்சுத டி - அம்மா 
பவளம தாச்சுத டி ஆணி  
4922
மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம் 
மாணிக்கம் ஆச்சுத டி - அம்மா 
மாணிக்கம் ஆச்சுத டி ஆணி  
4923
பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப் 
பேர்மணி ஆச்சுத டி - அம்மா 
பேர்மணி ஆச்சுத டி ஆணி  
4924
வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள் 
வெண்மணி ஆச்சுத டி - அம்மா 
வெண்மணி ஆச்சுத டி ஆணி  
4925
புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி 
பொன்மணி ஆச்சுத டி - அம்மா 
பொன்மணி ஆச்சுத டி ஆணி