4926
பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம் 
படிகம தாச்சுத டி - அம்மா 
படிகம தாச்சுத டி ஆணி  
4927
ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம் 
இசைந்தபொற் றம்பம டி - அம்மா 
இசைந்தபொற் றம்பம டி ஆணி  
4928
பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட 
புதுமைஎன் சொல்வன டி - அம்மா 
புதுமைஎன் சொல்வன டி ஆணி  
4929
ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல 
என்னள வல்லவ டி - அம்மா 
என்னள வல்லவ டி ஆணி  
,
4930
ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம் 
ஆகவந் தார்கள டி - அம்மா 
ஆகவந் தார்கள டி ஆணி