4931
வந்து மயக்க மயங்காமல் நான்அருள் 
வல்லபம் பெற்றன டி - அம்மா 
வல்லபம் பெற்றன டி ஆணி  
4932
வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி 
மணிமுடி கண்டேன டி - அம்மா 
மணிமுடி கண்டேன டி ஆணி  
4933
மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது 
மற்றது கண்டேன டி - அம்மா 
மற்றது கண்டேன டி ஆணி  
4934
கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற் 
கோயில் இருந்தத டி - அம்மா 
கோயில் இருந்தத டி ஆணி  
4935
கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில் 
கூசாது சென்றன டி - அம்மா 
கூசாது சென்றன டி ஆணி