4936
கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள் 
கோடிபல் கோடிய டி - அம்மா 
கோடிபல் கோடிய டி ஆணி  
4937
ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன் 
ஐவண்ணம் ஆகும டி - அம்மா 
ஐவண்ணம் ஆகும டி ஆணி  
4938
அங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும் 
அப்பாலே சென்றன டி - அம்மா 
அப்பாலே சென்றன டி ஆணி  
4939
அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில் 
ஐவர் இருந்தார டி - அம்மா 
ஐவர் இருந்தார டி ஆணி  
4940
மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர் 
மணிவாயில் உற்றேன டி - அம்மா 
மணிவாயில் உற்றேன டி ஆணி