4941
எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக 
இருவர் இருந்தார டி - அம்மா 
இருவர் இருந்தார டி ஆணி  
4942
அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில் 
அன்பொடு கண்டேன டி - அம்மா 
அன்பொடு கண்டேன டி ஆணி  
4943
அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன் 
அம்மை இருந்தாள டி - அம்மா 
அம்மை இருந்தாள டி ஆணி  
4944
அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன் 
அமுதமும் உண்டேன டி - அம்மா 
அமுதமும் உண்டேன டி ஆணி  
4945
தாங்கும் அவளரு ளாலே நடராஜர் 
சந்நிதி கண்டேன டி - அம்மா 
சந்நிதி கண்டேன டி ஆணி