4946
சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது 
சாமி அறிவார டி - அம்மா 
சாமி அறிவார டி     
 ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள் 
அற்புதக் காட்சிய டி - அம்மா 
அற்புதக் காட்சிய டி  
திருச்சிற்றம்பலம் 
டீயஉம

--------------------------------------------------------------------------------


 அருட்காட்சி 

சிந்து

பல்லவி 

4947
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் 
மயில்குயில் ஆச்சுத டி - அக்கச்சி 
மயில்குயில் ஆச்சுத டி()    
 () மயில் - விந்து குயில் - நாதம் 
4948
துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும் 
வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி 
வள்ளலைக் கண்டேன டி    
4949
சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட் 
சோதியைக் கண்டேன டி - அக்கச்சி 
சோதியைக் கண்டேன டி    
4950
பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் 
ஐயரைக் கண்டேன டி - அக்கச்சி 
ஐயரைக் கண்டேன டி   
திருச்சிற்றம்பலம் 
டீயஉம

--------------------------------------------------------------------------------


 பந்தாடல் 

சிந்து 

பல்லவி