4961
துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச் 

சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப் 
பதிசெயும் சித்திகள் பற்பல வாகப் 

பாரிடை வானிடைப் பற்பல காலம் 
விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும் 

மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ் 
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து 

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து     
 ஆடேடி பந்து ஆடேடி பந்து 
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து  
 கலிவிருத்தம்  
4962
பூவாம லேநிதம் காய்த்த இடத்தும் 
பூவார் மலர்கொண்டு பந்தாடா நின்றேன் 
சாவா வரம்தந்து வாழ்வாயோ பந்தே 
சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே     
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------


 மெய்யருள் வியப்பு 

சிந்து 

பல்லவி 
4963
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ 
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ   
கண்ணிகள் 

4964
தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்ற தே 
தாவிப் போகப் போக நூலின் தரத்தில் நின்ற தே 
கனக்கத் திகைப்புற் றங்கே நானும் கலங்கி வருந்த வே 
கலக்கம் நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்த வே  எனக்கும் உனக்கும்   
4965
இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுக வே 
ஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணுக வே 
அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கி யே 
அதன்மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கி யே  எனக்கும் உனக்கும்