4966
இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்க வே 
யானும் சிலரும் படகில் ஏறி யேம யங்க வே 
விரவில் தனித்தங் கென்னை ஒருகல் மேட்டில் ஏற்றி யே 
விண்ணில் உயர்ந்த மாடத் திருக்க விதித்தாய் போற்றி யே எனக்கும் உனக்கும்  
4967
மேலைப் பாற்சிவ கங்கை என்னுமோர் தீர்த்தம் தன்னை யே 
மேவிப் படியில் தவறி நீரில் விழுந்த என்னை யே 
ஏலத் துகிலும் உடம்பும் நனையா தெடுத்த தேஒன் றோ 
எடுத்தென் கரத்தில் பொற்பூண் அணிந்த இறைவன் நீயன் றோ எனக்கும் உனக்கும்  
4968
என்ன துடலும் உயிரும் பொருளும் நின்ன தல்ல வோ 
எந்தாய் இதனைப் பெறுக எனநான் இன்று சொல்ல வோ 
சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்கு தே 
சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்கு தே எனக்கும் உனக்கும் 
 உயிரும் உடலும் - ச மு க 
 பெருகி - ச மு க 
4969
அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லை யே 
அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லை யே 
எப்பா லவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லை யே 
எனக்கும் நின்மே லன்றி உலகில் இச்சை இல்லை யே எனக்கும் உனக்கும்  
4970
அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே 
அணைப்போம் என்னும் உண்மை யால்என் ஆவி தங்கு தே 
விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளு தே 
மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளு தே எனக்கும் உனக்கும்