4976
நெடுநாள் முயன்றும் காண்டற் கரிய நிலையைக் காட்டி யே 
நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டி யே 
நடுநா டியநின் அருளுக் கென்மேல் என்ன நாட்ட மோ 
நாய்க்குத் தவிசிட் டனைநின் தனக்கிங் கிதுவோர் ஆட்ட மோ  எனக்கும் உனக்கும்   
4977
நாகா திபனும் அயனும் மாலும் நறுமு றென்ன வே 
ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்ன வே 
சாகாக்கலையை எனக்குப் பயிற்றித் தந்த தயவை யே 
சாற்றற் கரிது நினக்கென் கொடுப்ப தேதும் வியவை யே  எனக்கும் உனக்கும்   
4978
யாது கருதி என்னை ஆண்ட தைய ஐய வோ 
யானுன் அடிப்பொற் றுணைகட் குவந்து தொழும்பு செய்ய வோ 
ஓது கடவுட் கூட்டம் அனைத்தும் அடிமை அல்ல வோ 
உடையாய் அவர்க்குள் எனையும் ஒருவன் என்று சொல்ல வோ எனக்கும் உனக்கும்    
4979
தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கி னேனை யே 
தாங்கித் தெரித்த தயவை நினைக்கில் உருக்கு தூனை யே 
புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்க வே 
புகுவித் தாயை என்வாய் துடிப்ப தேத்தித் துதிக்க வே  எனக்கும் உனக்கும்    
4980
தாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தை யே 
தனியே நின்னை நினைக்கக் கிளர்வ தெனது சிந்தை யே 
நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக் கொடுத்த பண்ப னே 
நான்செய் தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்ப னே  எனக்கும் உனக்கும்