4986
கருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே 
காண்போம் என்று நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே 
அருள்நா டகஞ்செய் பதங்கள் பாடி ஆட விரைவ தே 
ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவ தே எனக்கும் உனக்கும்  
4987
அருளார் சோதி என்னுள் விளங்க அளித்த காலத் தே 
அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்த திந்த ஞாலத் தே 
பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னை யோ 
பொன்னென் றைய மதிப்ப துதவாத் துரும்பு தன்னை யோ எனக்கும் உனக்கும்  
4988
எனக்குள் நீயும் உனக்குள் நானும்இருக்கும் தன்மை யே 
இன்று காட்டிக் கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மை யே 
தனக்குள் ளதுதன் தலைவர்க் குளதென் றறிஞர் சொல்வ தே 
சரியென் றெண்ணி எனது மனது களித்து வெல்வ தே எனக்கும் உனக்கும்  
4989
கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே 
கனித்த பெரிய தனித்த கனிஎன் கருத்துள் இனித்த தே 
தருணத் துண்டு மகிழ்வுற் றேன்அம் மகிழ்ச்சி சொல்ல வே 
தனித்துக் கரைந்த எனது கருத்தின் தரத்த தல்ல வே எனக்கும் உனக்கும்  
4990
என்னா ருயிர்க்குத் துணைவ நின்னை நான்து திக்க வே 
என்ன தவஞ்செய் தேன்முன் உலகு ளோர்ம திக்க வே 
பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரிய தே 
புலைய னேனுக் களித்த கருணை மிகவும் பெரிய தே எனக்கும் உனக்கும்