5006
இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மை யே 
என்பால் செய்ய வைத்தாய் இதுநின் அருளின் தன்மை யே 
அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கி யே 
அப்பா வாழி எனவும் புரிந்தாய் அடிமை யாக்கி யே எனக்கும் உனக்கும்  
5007
அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதி யே 
அரசே எனக்குள் விளங்கும் ஆதி யாம்அ னாதி யே 
ஒழியாத் துயரை ஒழித்த பெரிய கருணை யாள னே 
ஒன்றாய் ஒன்றில் உபய மாகி ஒளிரும் தாள னே எனக்கும் உனக்கும்  
5008
பாலும் தேனும் கலந்த தென்ன என்னுள் இனிக்க வே 
பரம ஞான அமுதம் அளிக்கின் றாய்த னிக்க வே 
ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவ தென்ப ரே 
இன்று நோக்கி ஓர வாரன் என்பர் அன்ப ரே எனக்கும் உனக்கும்  
5009
ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே 
அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரிய தே 
மெய்யா நீசெய் உதவி ஒருகைம் மாறு வேண்டு மே 
வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டு மே எனக்கும் உனக்கும்  
5010
பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்ட மும் 
போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்ட மும் 
நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமு மே 
நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமு மே எனக்கும் உனக்கும்