5041
பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே 
படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையு மே 
துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற் றே 
துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே எனக்கும் உனக்கும்  
5042
ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே 
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையு மே 
ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற் றே 
இறைவா நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே எனக்கும் உனக்கும்  
5043
பாட்டால் உனது பதத்தை நாடிப் பாடும் வாய ரே 
பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேய ரே 
நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயி லோ 
நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக் காயி லோ எனக்கும் உனக்கும்  
5044
சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மே 
சிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மே 
என்னை அவத்தைக் கடல்நின் றிங்ஙன் எடுத்த தெய்வ மே 
எல்லா நலமும் தரும்இன் னமுதம் கொடுத்த தெய்வ மே எனக்கும் உனக்கும்  
5045
அச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே 
அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்துள் அமர்ந்த அமுத னே 
இச்சை யாவும் முடித்துக் கொடுத்துள் இலங்கும் குரவ னே 
என்றும் இறவாக் கல்வி அடியேற் கீய்ந்த குரவ னே எனக்கும் உனக்கும்