5046
உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னை யே 
ஓதா துணர உணரும் உணர்வை உதவும் அன்னை யே 
தௌ;ளும் கருணைச் செங்கோல் செலுத்தச் செய்த அப்ப னே 
செல்வப் பிள்ளை யாக்கி என்னுள் சேர்ந்த அப்ப னே  எனக்கும் உனக்கும்    
5047
இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவ னே 
எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவ னே 
கரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவ னே 
களித்தென் தனையும் சன்மார்க் கத்தில் நாட்டும் துணைவ னே  எனக்கும் உனக்கும்   
5048
சற்றும் வருந்தப் பாரா தென்னைத் தாங்கும் நேய னே 
தான்நான் என்று பிரித்தற் கரிய தரத்து நேய னே 
முற்றும் தனதை எனக்குக் கொடுத்து முயங்கும் நேய னே 
முன்னே நான்செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேய னே  எனக்கும் உனக்கும்   
5049
நேயா நின்னை நினைக்க நினைக்க நெஞ்சம் களிக்கு தே 
நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர்து ளிக்கு தே 
ஓயா துனது பெருமை நினைக்க உவகை நீடு தே 
உரைப்பார் எவர்என் றுலகில் பலரை ஓடித் தேடு தே  எனக்கும் உனக்கும்   
5050
பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடு தே 
பொதுவைக் காண உள்ளே ஆசை பொங்கி ஆடு தே 
என்னே பிறர்தம் வரவு நோக்கக் கண்கள் வெதும்பு தே 
எந்தாய் வரவை நினைக்கக் களிப்புப் பொங்கித் ததும்பு தே  எனக்கும் உனக்கும்