5051
மணியே நின்னைப் பொதுவில் கண்ட மனிதர் தேவ ரே 
மனிதர் கண்ணிற் பட்ட புல்லும் மரமும் தேவ ரே 
அணியே நின்னைப் பாடும் அடியர் தாமோ மூவ ரே 
அவரைக் கண்டார் அவரைக் கண்டார் அவர்கள் மூவ ரே எனக்கும் உனக்கும்  
5052
வாழ்வே நினது நடங்கண் டவரைச் சுத்தர் என்ப னோ 
மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்ப னோ 
ஏழ்வே தனையும் நீக்கி வாழும் நித்தர் என்ப னோ 
எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்ப னோ எனக்கும் உனக்கும்  
5053
சிவமே நின்னைப் பொதுவில் கண்ட செல்வர் தம்மை யே 
தேவர் கண்டு கொண்டு வணங்கு கின்றார் இம்மை யே 
தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்த ரே 
தகும்ஐந் தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்த ரே எனக்கும் உனக்கும்  
5054
ஐவ ராலும் நின்னை அறிதற் கருமை அருமை யே 
ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமை யே 
பொய்வ ராத வாய்கொண் டுன்னைப் போற்றும் அன்ப ரே 
பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்ப ரே எனக்கும் உனக்கும்  
5055
என்னைக் காட்டிஎன்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே 
இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டி யே 
பொன்னைக் காட்டிப் பொன்னே நினது புகழைப் பாடி யே 
புந்தி களிக்க வைத்தாய் அழியா தென்னை நாடி யே எனக்கும் உனக்கும்