5061
சாகாக் கல்விஎனக்குப் பயிற்றித் தந்த சோதி யே 
தன்னேர் முடிஒன் றெனது முடியில் தரித்த சோதி யே 
ஏகாக் கரப்பொற் பீடத்தென்னை ஏற்று சோதி யே 
எல்லாம் வல்ல சித்திஆட்சி ஈய்ந்த சோதி யே எனக்கும் உனக்கும்  
5062
சோதி எவையும் விளங்க விளங்கும் சோதி வாழி யே 
துரிய வெளியின் நடுநின் றோங்கும் சோதி வாழி யே 
சூதி லாமெய்ச் சிற்றம் பலத்துச் சோதி வெல்க வே 
துலங்கப் பொன்னம் பலத்தில் ஆடும் சோதி வெல்க வே எனக்கும் உனக்கும்  
5063
சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே 
சுகவாழ் வளித்த சிற்றம் பலத்துச் சோதி போற்றி யே 
சுத்த சுடர்ப்பொற் சபையில் ஆடும் சோதி போற்றி யே 
சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றி யே   
 எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ 
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ 

5064
சிவசிவ கஜமுக கணநா தா 
சிவகண வந்தித குணநீ தா  
5065
சிவசிவ சிவசிவ தத்துவ போதா 
சிவகுரு பரசிவ சண்முக நாதா()  
 ()ஆ பா பதிப்பைத் தவிர மற்றைப் பதிப்புகள் அனைத்திலும் 
"அம்பலத்தரசே" முதலாக நாமாவளி தொடங்குகிறது ஆ பாபதிப்பில் மட்டும் 
இவ்விரண்டு நாமாவளிகளும் முன்வைக்கப் பெற்று "அம்பலத்தரசே" மூன்றாவதாக 
வைக்கப்பெற்றுள்ளது இறுக்கம் இரத்தின முதலியார், வேட்டவலம் ஜமீன்தார் 
அப்பாசாமி பண்டாரியார் இவ்விருவரின் படிகளில் மட்டுமே இவ்விரண்டு 
நாமாவளிகள் காணப் பெறுவதாயும், கிடைத்த மற்றைப் படிகளில் இவை இல்லை என்றும், 
அவற்றில் "அம்பலத்தரசே" என்பதே தொடக்கம் என்றும் ஆ பா குறிக்கிறார் 
இப்பதிப்பில் இவ்விரு நாமாவளிகளும் தனியாக எண்ணிடப் பெற்றுத் தனிப்படுத்திக் 
காட்டப் பெற்றுள்ளனஅம்பலத்தரசே எனத் தொடங்கும் நாமாவளிக்கு இவ்விரண்டையும் 
காப்பாகக் கொள்ளலாம்