5086
சந்தத மும்சிவ சங்கர பஜனம் 
சங்கிதம் என்பது சற்சன வசனம்   
5087
சங்கர சிவசிவ மாதே வா 
எங்களை ஆட்கொள வாவா வா   
5088
அரகர சிவசிவ மாதே வா 
அருளமு தம்தர வாவா வா   
5089
நடனசி காமணி நவமணி யே 
திடனக மாமணி சிவமணி யே   
5090
நடமிடும் அம்பல நன்மணி யே 
புடமிடு செம்பல பொன்மணி யே