5091
உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே 
தெவிட்டாது தித்திக்கும் தௌ;ளமு தே   
5092
நடராஜ வள்ளலை நாடுத லே 
நம்தொழி லாம்விளை யாடுத லே   
5093
அருட்பொது நடமிடு தாண்டவ னே 
அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே   
5094
நடராஜ மாணிக்கம் ஒன்றது வே 
நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே   
5095
நடராஜ பலமது நம்பல மே 
நடமாடு வதுதிரு அம்பல மே