5096
நடராஜர் பாட்டே நறும்பாட்டு 
ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு   
5097
சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு 
ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு   
5098
அம்பலப் பாட்டே அருட்பாட்டு 
அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு   
5099
அம்பல வாணனை நாடின னே 
அவனடி யாரொடும் கூடின னே   
5100
தம்பத மாம்புகழ் பாடின னே 
தந்தன என்றுகூத் தாடின னே