5101
நான்சொன்ன பாடலும் கேட்டா ரே 
ஞான சிதம்பர நாட்டா ரே   
5102
இனித்துயர் படமாட்டேன் விட்டே னே 
என்குரு மேல்ஆணை இட்டே னே   
5103
இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே 
என்னப்பன் மேல்ஆணை இட்டே னே   
5104
சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம் 
சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்   
5105
நாதாந்த நாட்டுக்கு நாயக ரே 
நடராஜ ரேசபா நாயக ரே