5106
நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே 
நடராஜ எனில்வரும் நித்திய மே   
5107
நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே 
நல்வரம் ஈயும் தயாநிதி யே   
5108
நடராஜர் தம்நடம் நன்னட மே 
நடம்புரி கின்றதும் என்னிட மே   
5109
சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே 
திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே   
5110
சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே 
சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே