5111
இறவா வரம்தரு நற்சபை யே 
எனமறை புகழ்வது சிற்சபை யே   
5112
என்இரு கண்ணுள் இருந்தவ னே 
இறவா தருளும் மருந்தவ னே   
5113
சிற்சபை அப்பனை உற்றே னே 
சித்திஎ லாம்செயப் பெற்றே னே   
5114
அம்பல வாணர்தம் அடியவ ரே 
அருளர சாள்மணி முடியவ ரே   
5115
அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே 
ஆனந்தத் தௌ;ளமு துண்டே னே