5116
இருட்பெரு மாயையை விண்டே னே 
எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே   
5117
கருணா நிதியே குணநிதி யே 
கதிமா நிதியே கலாநிதி யே   
5118
தருணா பதியே சிவபதி யே 
தனிமா பதியே சபாபதி யே   
5119
கருணா நிதியே சபாபதி யே 
கதிமா நிதியே பசுபதி யே   
5120
சபாபதி பாதம் தபோப்ர சாதம் 
தயாநிதி போதம் சதோதய வேதம்