5121
கருணாம் பரவர கரசிவ பவபவ 
அருணாம் பரதர ஹரஹர சிவசிவ   
5122
கனகா கரபுர ஹரசிர கரதர 
கருணா கரபர சுரவர ஹரஹர   
5123
கனக சபாபதி பசுபதி நவபதி 
அனக உமாபதி அதிபதி சிவபதி   
5124
வேதாந்த பராம்பர ஜயஜய() 
நாதாந்த நடாம்பர ஜயஜய   
 () சவுதய - ஆ பா பதிப்பு   
5125
ஏகாந்த சர்வேச சமோதம 
யோகாந்த நடேச நமோநம