Vallalar.Net
Vallalar.Net
5146
சிதம்பிர காசா பரம்பிர கா சா 
சிதம்ப ரேசா சுயம்பிர கா சா   
5147
அருட்பிர காசம் பரப்பிர காசம் 
அகப்பிர காசம் சிவப்பிர காசம்   
5148
நடப்பிர காசம் தவப்பிர காசம் 
நவப்பிர காசம் சிவப்பிர காசம்   
5149
நாத பரம்பர னே பர - நாத சிதம்பர னே 
நாத திகம்பர னே தச - நாத சுதந்தர னே   
5150
ஞான நடத்தவ னே பர - ஞானிஇ டத்தவ னே 
ஞான வரத்தவ னே சிவ - ஞான புரத்தவ னே