5156
தம்குறுவம்பு மங்கநிரம்பு சங்கம்இயம்பும் நம்கொழுகொம்பு 
சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு   
5157
சந்தம்இயன்று அந்தணர்நன்று சந்ததம்நின்று வந்தனம்என்று 
சந்திசெய்மன்று மந்திரம்ஒன்று சங்கரசம்பு சங்கரசம்பு   
5158
நனம்தலைவீதி நடந்திடுசாதி நலம்கொளும்ஆதி நடம்புரிநீதி 
தினம்கலைஓதி சிவம்தரும்ஓதி சிதம்பரஸோதி சிதம்பரஸோதி   
5159
நகப்பெருஞ்சோதி சுகப்பெருஞ்சோதி 

நவப்பெருஞ்சோதி சிவப்பெருஞ்சோதி 
அகப்பெருஞ்சோதி நடப்பெருஞ்சோதி 

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி   
5160
உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி 

உவப்புறுவேதி நவப்பெருவாதி 
அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி 

அருட்சிவஸோதி அருட்சிவஸோதி