5161
ஓதஅடங் காதுமடங் காதுதொடங் காது 

ஓகைஒடுங் காதுதடுங் காதுநடுங் காது 
சூதமலங் காதுவிலங் காதுகலங் காது 

ஸோதிபரஞ் ஸோதிசுயஞ் ஸோதிபெருஞ் ஸோதி   
5162
ஏதமுயங் காதுகயங் காதுமயங் காது 

ஏறிஇறங் காதுஉறங் காதுகறங் காது 
சூதமிணங் காதுபிணங் காதுவணங் காது 

ஸோதிபரஞ் ஸோதிசுயஞ் ஸோதிபெருஞ் ஸோதி   
5163
அகரசபாபதி சிகரசபாபதி அனகசபாபதி கனகசபாபதி 
மகரசபாபதி உகரசபாபதி வரதசபாபதி சரதசபாபதி   
5164
அமலசபாபதி அபயசபாபதி அமுதசபாபதி அகிலசபாபதி 
நிமலசபாபதி நிபுணசபாபதி நிலயசபாபதி நிபிடசபாபதி   
5165
பரநடம்சிவ சிதம்பரநடமே பதிநடம்சிவ சபாபதிநடமே 
திருநடனம்பர குருநடமே சிவநடம்அம்பர நவநடமே