5166
அம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திருநடமே 
எம்பலத்தொருநடம் பெருநடமே இதன்பரத்திடுநடம் குருநடமே   
5167
அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே 

அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே 
தஞ்சோபம்கொலை சாராதே சந்தோடம்சிவ மாம்ஈதே 

சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா   
5168
எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத 

என்றோ டிந்தன நன்றா மங்கண வெங்கோ மங்கள வெஞ்சா நெஞ்சக 
சந்தே கங்கெட நந்தா மந்திர சந்தோ டம்பெற வந்தா ளந்தண 

சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர   
5169
நஞ்சோ என்றிடு நங்கோ பங்கெட நன்றே தந்தனை நந்தா மந்தண 

நம்பா நெஞ்சில் நிரம்பா நம்பர நம்பா நம்பதி யம்பா தம்பதி 
தஞ்சோ வென்றவர் தஞ்சோ பந்தெறு தந்தா வந்தன நுந்தாள் தந்திடு 

சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர   
5170
பொதுநிலை அருள்வது பொதுவினில் நிறைவது 

பொதுநலம் உடையது பொதுநடம் இடுவது 
அதுபரம் அதுபதி அதுபொருள் அதுசிவம் 

அரஅர அரஅர அரஅர அரஅர