5176
கலகந்தரும் அவலம்பன கதிநம்பல நிதமும் 

கனகந்தரு மணிமன்றுறு கதிதந்தருள் உடலஞ் 
சலசந்திரன் எனநின்றவர் தழுவும்பத சரணம் 

சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்   
5177
எனதென்பதும் நினதென்பதும் இதுஎன்றுணர் தருணம் 

இனம்ஒன்றது பிறிதன்றென இசைகின்றது பரமம் 
தனதென்பது மனதென்பது ஜகமென்றனை சரணம் 

சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 சிவபோகம்

சிந்து 
5178
போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம் 
ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம்   
5179
நலமங்கலம் உறும்அம்பல நடனம்அது நடனம் 
பலநன்கருள் சிவசங்கர படனம்அது படனம்   
5180
சூதுமன்னும் இந்தையே சூடல்என்ன விந்தையே 
கோதுவிண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே