5181
அன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே 
இன்பமென்பன் எந்தையே எந்தைதந்தை தந்தையே   
5182
ஞானசித்தி புரத்தனே நாதசத்தி பரத்தனே 
வானம்ஒத்த தரத்தனே வாதவித்தை வரத்தனே   
5183
நீஎன்னப்பன் அல்லவா நினக்கும்இன்னஞ் சொல்லவா 
தாயின்மிக்க நல்லவா சர்வசித்தி வல்லவா   
5184
பலத்தில்தன்னம் பலத்தில்பொன்னம் பலத்தில்துன்னும் நலத்தனே 
பலத்தில்பன்னும் பரத்தில்துன்னும் பரத்தில்மன்னும் குலத்தனே   
5185
ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே 
தூயவாய காயதேய தோயமேய ஸோதியே