5186
ஆதவாத வேதகீத வாதவாத வாதியே 
சூதவாத பாதநாத சூதஜாத ஸோதியே   
5187
அங்கசங்க மங்கைபங்க ஆதிஆதி ஆதியே 
துங்கபுங்க அங்கலிங்க ஸோதிஸோதி ஸோதியே   
5188
அத்தமுத்த அத்தமுத்த ஆதிஆதி ஆதியே 
சுத்தசித்த சப்தநிர்த்த ஸோதிஸோதி ஸோதியே   
5189
அஞ்சல்அஞ்சல் என்றுவந்தென் நெஞ்சமர்ந்த குழகனே 
வஞ்சநஞ்சம் உண்டகண்ட மன்றுள்நின்ற அழகனே   
5190
தொண்டர்கண்டு கண்டுமொண்டு கொண்டுள்உண்ட இன்பனே 
அண்டர்அண்டம் உண்டவிண்டு தொண்டுமண்டும் அன்பனே