5191
கந்ததொந்த பந்தசிந்து சிந்தவந்த காலமே 
எந்தஎந்த சந்தமுந்து மந்தவந்த கோலமே   
5192
என்றும்என்றின் ஒன்றுமன்றுள் நன்றுநின்ற ஈசனே 
ஒன்றும்ஒன்றும் ஒன்றும்ஒன்றும் ஒன்றதென்ற தேசனே   
5193
எட்டஎட்டி ஒட்டஒட்டும் இட்டதிட்ட கீர்த்தியே 
அட்டவட்டம் நட்டமிட்ட சிட்டவட்ட மூர்த்தியே   
5194
சேர்இகார சாரவார சீர்அகார ஊரனே 
ஓர்உகார தேரதீர வாரவார தூரனே   
5195
வெய்யநொய்ய நையநைய மெய்புகன்ற துய்யனே 
ஐயர்ஐய நையும்வையம் உய்யநின்ற ஐயனே