5196
பாசநாச பாபநாச பாததேச ஈசனே 
வாசவாச தாசர்நேச வாசகாச பேசனே   
5197
உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே 
பிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே   
5198
அகிலபுவன உயிர்கள்தழைய அபயம்உதவும் அமலனே 
அயனும்அரியும் அரனும்மகிழ அருளும்நடன விமலனே   
5199
அகரஉகர மகரவகர அமுதசிகர சரணமே 
அபரசபர அமனசமன அமலநிமல சரணமே   
5200
தகரககன நடனகடன சகளவகள சரணமே 
சகுணநிகுண சகமநிகம சகிதவிகித சரணமே