5201
அனகவனஜ அமிதஅமிர்த அகலஅகில சரணமே 
அதுலவனத அசுதவசல அநிலவனல சரணமே   
5202
தனககனக சபையஅபய சரதவரத சரணமே 
சதுரசதர சகசசரித தருணசரண சரணமே   
5203
உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே 
உருவின்உருவும் உருவுள்உருவும் உடையதலைவ சரணமே   
5204
இளகும்இதய கமலம்அதனை இறைகொள்இறைவ சரணமே 
இருமைஒருமை நலமும்அருளும் இனியசமுக சரணமே   
5205
அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே 
அடியர்இதய வெளியில்நடனம் அதுசெய்அதிப சரணமே