5206
ஒடிவில்கருணை அமுதம்உதவும் உபலவடிவ சரணமே 
உலகமுழுதும் உறையநிறையும் உபயசரண சரணமே   
5207
அறிவுள்அறியும் அறிவைஅறிய அருளும்நிமல சரணமே 
அவசம்உறுமெய் யடியர்இதயம் அமரும்அமல சரணமே   
5208
எறிவில்உலகில்() உயிரைஉடலில் இணைசெய்இறைவ சரணமே 
எனையும்ஒருவன் எனவுள்உணரும் எனதுதலைவ சரணமே   
 () இருமைஉலகில் - முதற்பதிப்பு பொ சு பதிப்பு   
5209
நினையும்நினைவு கனியஇனிய நிறைவுதருக சரணமே 
நினையும்எனையும் ஒருமைபுரியும் நெறியில்நிறுவு சரணமே   
5210
வனையுமதுர அமுதஉணவு மலியஉதவு சரணமே 
மருவுசபையில் நடனவரத வருகவருக சரணமே