5211
நினைக்கில்நெஞ்சம் இனிக்கும்என்ற நிருத்தமன்றில் ஒருத்தனே 
நினைக்கும்அன்பர் நிலைக்கநின்று பொருத்துகின்ற கருத்தனே   
5212
மயங்கிநெஞ்சு கலங்கிநின்று மலங்கினேனை ஆண்டவா 
வயங்கிநின்று துலங்குமன்றில் இலங்குஞான தாண்டவா   
5213
களங்கவாத களங்கொள்சூதர் உளங்கொளாத பாதனே 
களங்கிலாத உளங்கொள்வாருள் விளங்குஞான நாதனே   
5214
தடுத்தமலத்தைக் கெடுத்துநலத்தைக் கொடுத்தகருணைத் தந்தையே 
தனித்தநிலத்தில் இனித்தகுலத்தில் குனித்தஅடிகொள் எந்தையே   
5215
எச்சநீட்டி விச்சைகாட்டி இச்சைஊட்டும் இன்பனே 
அச்சம்ஓட்டி அச்சுநாட்டி வைச்சுள்ஆட்டும் அன்பனே